இந்தியர்களின் சுவிஸ் வங்கி டெபாசிட் ரூ.20,706 கோடியாக உயர்வு

SHARE

சுவிஸ் மத்திய வங்கிகளில் இந்தியர்கள் ரூ. 20 ஆயிரத்து 706 கோடி வரை டிபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக திகழ்கின்றன. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை, சுவிஸ் தேசிய வங்கி நேற்று
வெளியிட்டது. அதில், இந்த வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள நிதிகள் குறித்த தகவல்களும் கிடைத்து உள்ளன.

இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், சுவிஸ் வங்கிகளில், 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, இந்த அறிக்கைவாயிலாக தெரிய வந்துள்ளது. இது 2019ம் ஆண்டு இறுதியில் 6,625 கோடியாக இருந்தது.இந்த, 20 ஆயிரத்து, 706 கோடி ரூபாயில், 4,000 கோடி ரூபாய், வாடிக்கையாளர்களின், ‘டிபாசிட்’ தொகை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment