இந்தியாவுக்கும் மியான்மார் நாட்டுக்கும் இடையே 1643 கிலோமீட்டர் எல்லை உள்ளது. தற்போது மியான்மர் நாட்டில் ராணுவ அத்துமீறல் நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை 116 மியான்மர் அகதிகள் இந்தியாவுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தவிர 8 மியான்மர் காவலர்களும், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களை இந்திய காவலர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முயற்சி மேற்கொள்கின்றனர்.கலவரத்தை அடக்காத செந்த நாட்டு காவலர்களையும் அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குவதாக காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுவரை 116 அகதிகள் மிசோரம் மாநிலம் ராம்லியானா கிராமத்துக்கு வந்து சேர்ந்துள்ளனர். அம்மாநிலத்தின் டியூ ஆற்றை கடந்து இவர்கள் படகுமூலம் இந்தியா வந்து சேர்கின்றனர்.கடந்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை ஓர் தகவலை வெளியிட்டு இருந்தது. மியான்மர்-இந்தியா எல்லையில் உள்ள இந்திய மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மனிதத்தன்மை அடிப்படையில் சில மியான்மர் குடிமக்களை அனுமதிக்கலாம். இதர அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.