சுழற்சி அடிப்படையில், இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நேதாஜியின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேரணியில் மம்தா கலந்து கொண்டார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
. புதிய நாடாளுமன்றம் கட்டுகிறீர்கள். புதிய விமானம் வாங்குகிறீர்கள். ஆனால், நேதாஜிக்கு நினைவிடம் கட்டாதது ஏன்? எனகேள்வி எழுப்பினார்.
இந்தியாவிற்கு சுழற்சி அடிப்படையில் நான்கு தலைநகரங்கள் இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாக தெரிவித்த அவர்,. இந்தியாவை, ஆங்கிலேயர்கள் கோல்கட்டாவில் இருந்து ஆட்சி செய்ததை நினைவு படுத்திய அவர்,. நாட்டிற்கு ஒரே தலைநகரம் மட்டும் ஏன் இருக்க வேண்டும்? என கேளவி எழுப்பினார்.