இலங்கை- நாளை நாடாளுமன்ற தேர்தல். மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார் ராஜபக்சே.

SHARE

உமாபதி கிருஷ்ணன்

இலங்கையில் நாளை , நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைகளாக , 3 ஆயிரத்து 800 பேரும் என மொத்தம் 7 ஆயிரத்து 482 பேர் போட்டியிடுகின்றனர். 
அந்த நாடு முழுவதிலுமான வாக்காளர் எண்ணிக்கை, ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 . இந்த தேர்தலுக்கு, 12 ஆயிரத்து 985 வாக்கு பதிவு மையங்கள், உள்ள நிலையில், 71 இடங்களில், வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதன் முறை. 

இந்த தேர்தலில் ராஜபக்சேவின் மொட்டு கட்சி 106 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் 113 இடங்களில் இந்த முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், ஜனதாவி முக்தி பெரமுனா உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ராஜபக்சே ஆட்சியை பிடிப்பார் என, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் உறுதியாகியுள்ளது


SHARE

Related posts

Leave a Comment