உழைத்தா…ஊர்ந்தா…முதலமைச்சர் பழனிச்சாமிக்கு ஸ்டாலின் கேள்வி

SHARE

முதல்வர் பழனிசாமி உழைத்து முதல்வரானாரா,ஊர்ந்து சென்று முதல்வரானாரா,என ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தி.மு.க., வேட்பாளர்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முதுகுளத்துார் ராஜ கண்ணப்பன், பரமக்குடி(தனி) முருகேசன், திருவாடானை காங்., வேட்பாளர் கரு.மாணிக்கம் ஆகியோரை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்

ரூ.616 கோடியில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவந்து மாவட்டத்தின் தண்ணீர் பஞ்சம் போக்கியவர் கருணாநிதி. தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி ஏதேதோ உளறி வருகிறார். அவர் உழைத்து உழைத்து தான் முன்னுக்கு வந்ததாக கூறியுள்ளார். மற்றவர்கள் உழைக்கவில்லையாம். அவர் எப்படி உழைத்தார் என்று நாட்டுக்கே தெரியும். நீங்கள் உழைத்த உழைப்பைத்தான் நாடே பார்த்து கைகொட்டி சிரிக்கிறதே.

ஸ்டாலின் உழைத்து வந்தாரா என்று கேட்கிறார். எனது 50 ஆண்டு அரசியல் வாழ்க்கை அதை சொல்லும். உங்கள் வரலாற்றை பேச ஆரம்பித்தால் நீங்கள் அந்த பொறுப்பில் இருக்க முடியாது, என்றார். அதன் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதன் விளைவால் ஏற்பட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வை தி.மு.க., ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பேசினார்.


SHARE

Related posts

Leave a Comment