ஊரடங்கு கால மின்சார கட்டணத்தை குறைக்கக்கோரி 21-ந்தேதி வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் – திமுக அறிவிப்பு

SHARE

ஊரடங்கு கால மின்சார கட்டணத்தை குறைக்கக்கோரி தமிழகத்தில் 21-ந்தேதி வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலிக்காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்க கோரியும், குறிப்பாக முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்த தொகைக்குரிய ‘யூனிட்டுகளை‘ கழிக்க வலியுறுத்தியும், அப்படி குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாத தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வருகிற 21-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது..


SHARE

Related posts

Leave a Comment