எடப்பாடிபழனிசாமி, பன்னீர் செல்வத்திற்கு முழு அதிகாரம் – பொதுக்குழுவில் தீர்மானங்கள்

SHARE

சென்னையில் அ.தி.மு.க.,வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. இதில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. இதில், சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு பற்றி முடிவெடுக்க இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலவச தடுப்பூசி, மினி கிளினிக், பொங்கல் பரிசு, புயல் நிவாரணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து 10 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் தமிழகத்தை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், திமுகவை கண்டித்து 2 தீர்மானங்கள் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


SHARE

Related posts

Leave a Comment