ஏழு பேர் விடுதலை: ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SHARE

 ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் ஏழு பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்து இன்று ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை தி.மு.க., எம்.பி. டி.ஆர். பாலு ஜனாதிபதி அலுவலகத்தில் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment