ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த அக்டோபரில் விருப்ப ஓய்வு கோரியிருந்த நிலையில், தற்போது அவர் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சகாயம், கடந்த 2001-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். பின் பல மாவட்டங்களில் பணிபுரிந்த அவர், மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிக்கொண்டுவந்தார். தற்போது கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையும் ஆற்றி வருகிறார்.
பைல் விருப்ப ஓய்வு பெற்றார் சகாயம் ஐஏஎஸ் அரசியல் கட்சி தொடங்குவாரா சகாயம்
அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விருப்ப ஓய்வு கேட்டு கடந்த அக்டோபர் 2ம் தேதி தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்தார். விருப்ப ஓய்வு கேட்டு 3 மாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, சகாயம் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.