எமது UAE செய்தியாளர் – NEWS ASIA. LIVE EXCLUSIVE
ஐக்கிய அமீரகத்தின் அஜ்மானில் உள்ள ஒரு சந்தையில் சற்று முன்னர் திடீரென பயங்கர வெடிசத்தம் கேட்டது.இதனை தொடர்ந்து பயங்கர புகை மண்டலத்துடன் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
அந்த பகுதியில் இருந்த மக்கள் சிதறி ஒடினர். இந்த வெடி விபத்தில் பலர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
நேற்று லெபனான் நாட்டில் ஏற்பட்ட வெடி விபத்து பீதி அடங்குவதற்குள் அஜ்மனில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.