திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் அதிபராக துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டனர். ‘

இதனையொட்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள சாஸ்தா கோவிலில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். அவரது வெற்றியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இது குறித்து பேசிய கிராம மக்கள் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு முறையாவது இங்கு வந்து எங்களை சந்திக்க வேண்டும். என்றனர்.