கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 4,267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,82,354 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 114 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,312 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.
இன்று அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று நீங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.