கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்து வருகிறது, நேற்று ஒரே நாளில் 3,648 பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகினர். 72 பேர் பலியானார்கள்.
இதனால் பலி எண்ணிக்கை 1,403 ஆக உயர்ந்தது.
பெங்களூருவில் அதிக அளவிலான கொரோனா பாதிப்புகள் இருந்தன. நேற்று ஒரு நாளில் 1,452 பேர் பாதிக்கப்பட்டு, 31 பேர் உயிரிழந்துள்ளனர் என கர்நாடக சுகாதார துறை தெரிவித்திருந்தது.
கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு இருக்காது என முதல் மந்திரி எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டுமே இனி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 3,649 பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று 1,664 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,459 ஆக உயர்ந்து உள்ளது. 44,140 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என கர்நாடக சுகாதார துறை தெரிவித்துள்ளது.