கர்நாடக மாநிலம் பெலகாவியில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதும் 113 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.பதிவு: மே 18, 2021 22:23 PMபெங்களூரு:
பெலகாவியில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதும் 113 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
66 போலீசாருக்கு பாதிப்புபெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதுபோல், மாநிலம் முழுவதும் போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், பெலகாவி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலைக்கு 113 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.இது குறித்து பெலகாவி நகர துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘பெலகாவி போலீஸ் கமிஷனர் எல்லைக்குள் பணியாற்றும் 66 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
அவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்த 66 போலீசாரின் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கிறது’’ என்று அவர் கூறியுள்ளார்.
2 டோஸ் தடுப்பூசிபெலகாவி டவுனில் 66 பேர், மாவட்டத்தின் பிற பகுதியில் 33 போலீசார், பெலகாவி ஆயுதப்படை போலீசார் 14 பேர் என ஒட்டு மொத்தமாக பெலகாவி மாவட்டத்தில் 113 போலீசார் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், பாதிப்புக்கு உள்ளான 113 போலீசாரும், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் கொரோனா பாதித்த போலீசார் அனைவரும் வீட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறுவதாகவும், ஒருசிலர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாகவும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்றும் உயா போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.