191 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிகோடு விமானம் நிலையம் வந்த ஏர் இந்திய விமானம் இரண்டாக பிளந்தது.
துபாயில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 191 பயணிகளை ஏற்றி வந்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்.
7,30 மணி அளவில் தரையிறங்கும் போது அங்கு பலத்த மழை பெய்துகொண்டிருந்த நிலையில், விமானம் தரையிரங்குவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. மெதுவாக ஓடி தரையிறங்காமல் தடால் என விழுந்து தரையிறங்கியது.இதில், விமானம் இரண்டாக பிளந்தது.
இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் கிடைக்காதபோதும் 100க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாக எமது கேரள மாநில செய்தியாளர் பதிவு செய்துள்ளார்.
விமானம் இரண்டாக பிளந்ததில் நடுவில் அமர்ந்திருந்த சிலர் விமானத்தில் இருந்து விழுந்திருக்க கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.