முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆளும் கேரள சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் இணைந்து ஓரணியாகவும், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. பா.ஜ.,வும் தீவிரமாக களமிறங்கி உள்ளதால், மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், 83 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதன்படி முதல்வர் பினராயி விஜயன் தர்மதம் தொகுதியிலும், அமைச்சர் கேகே சைலஜா மாட்டனூர் தொகுதியிலும், கேடி ஜலீல் தாவனூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.