கொரானா – சென்னையில் குறைவு கோவையில் அதிகரிப்பு….

SHARE

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 1,68,194 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்  34,866 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஒருவர் என 34,867 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 5,169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,985 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 4,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் மேலும் 81 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 227 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 177 பேரும் உயிரிழந்தனர்.
கொரோனாவால் மேலும் 404 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,872 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத 103 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,01,580 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் கொரோனா தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 18,77,211 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 27,026 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 15,54,759 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
12 வயதுக்குட்பட்ட 1,295 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி 128 குழந்தைகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்று மாநிலம் முழுவதும் 2456 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 10397 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 346​​​​​​​ ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.


SHARE

Related posts

Leave a Comment