கொரோனாவின் கோரபிடியில் கேரளா- புதிதாக 6,075 பேருக்கு தொற்று உறுதி

SHARE

கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பால் அம்மமாநில அரசு கலக்கமடைந்துள்ளது.அங்கு இன்று புதிதாக 6,075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தற்போது கேரளா உள்ளது. அம்மாநிலத்தில் இன்று புதிதாக 6,075 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 68 ஆயிரத்து 438 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், இன்று ஒரே நாளில் 5,948 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 96 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த  24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 517 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.   கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,867 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 67,650 பேர் சிகிச்சையில் உள்ளனர். 445 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment