கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி.
கொரோனா தொற்று பெரிதும் பரவிய நேரத்திலும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டவர் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட திமுக செயலாளருமான ஆர்,காந்தி.
கடந்த வாரம் அவருக்கு திடீர் காய்சல் ஏற்பட்டது.பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆர், காந்தி இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார்.