கொரோனாவில் இருந்து மீண்டார் இந்திய திரைஉலக சூப்பர் ஸ்டார் அமிதாப்

SHARE

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இந்திய திரை உலக சூப்பர் ஸ்டார் அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அவருடைய வீடு சீல் வைக்கப்பட்டது,அவரது மகனும் பாலிவுட் பிரபலமுமான அபிசேக் பச்சன்,மருமகள் ஐஸ்வர்யா ராய், மனைவி ஜெயா பச்சன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏற்கனவே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட அமிதாப் வயது முதிர்வு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார்.

தற்போது அமிதாப் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப் தனக்காக பிராத்தித்தவர்களுக்க நன்றி தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் காலனை முத்தமிட்டு மீண்டவர் அமிதாப்பச்சன்.

35 வருடங்களுக்கு முன்னர் கூலி என்ற படத்திற்காக சண்டைகாட்சியில் நடித்த போது வயிற்றில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி மீண்டார்.

பின்னர் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பெருத்த நஷ்டம் ஏற்பட்டு தான் இருந்த வீட்டை கூட விற்று கடை நிலைக்கு சென்று மீண்டார்.

கடைசியாக கொரானாவும் அவரிடம் தோற்று ஒடியுள்ளது, இந்திய மக்களை மகிழ்சியடைய செய்துள்ளது.

இருந்த போதிலும் தனது மகன் கொரோனாவில் இருந்து இன்னும் மீண்டு வராதது தனக்கு வருத்தம் அளிப்பதாக அமிதாப் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment