கொரோனா கணக்கில் புதிதாக 444 பலி எண்ணிக்கை சேர்ப்பு

SHARE

பிற நோய்களால் மரணமடைந்த 444 பேர், அவர்கள் தற்செயல் கொரோனா பாதிப்பும் கொண்டிருந்ததால், அவர்களை கொரோனா மரணமாக கணக்கிட்டு தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சிறுநீரக செயலிழப்பு, இருதய செயலிழப்பு, மூளை செயலிழப்பு, புற்றுநோய் போன்ற பிற நோய்களின் பாதிப்பால், மார்ச் மாதம் முதல் தற்போது வரை சென்னையில் மரணம் அடைந்தவர்களில் சிலர், கடைசி நேரத்தில் தற்செயலாக கோவிட் தொற்றும் கொண்டிருந்த நிலையில், கோவிட் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தனர்.

தற்போது இது பற்றிய புள்ளி விவரங்களை சரிபார்க்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு, மருத்துவமனை புள்ளிவிபரங்களும் கல்லறைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் மரண காரணம் பற்றிய புள்ளிவிபரங்களும் சரிபார்க்கப்பட்டன.

அதன்படி பிற நோய்களின் தீவிர பாதிப்பால் நடந்த 444 மரணங்களை, அவர்கள் தற்செயல் கோவிட் தொற்றும் கொண்டிருந்த காரணத்தால், அந்த 444 மரணங்களையும் கோவிட் மரணங்களாக தற்போது ஐ சி எம் ஆர் வழிகாட்டுதலின்படி தமிழக சுகாதாரத்துறை வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இதேபோன்ற காரணங்களால் விடுபட்ட கோவிட் மரணங்கள் பற்றிய அறிவிப்பு பிற மாநிலங்களிலும் நடந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 1382 பேர், டெல்லியில் 344 பேரின் மரணங்கள், விடுபட்ட கோவிட் மரணங்களாக பின்னர் அறிவிக்கப்பட்டன.

தமிழக அரசு சுகாதாரத் துறையும், இதே போன்று, பிற நோய்களின் தீவிரத்தால் ஏற்பட்ட மரணங்களை, தற்செயலான கோவிட் தொற்று காரணமாக, விடுபட்ட கோவிட் மரணங்களாக வெளிப்படையாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது


SHARE

Related posts

Leave a Comment