கொரோனா தடுப்பூசி விலை ஆயிரம் ?

SHARE

Dr. Mathi Vanan

ஆக்ஸ்போர்டு பல்கலைகழக கொரானா தடுப்பூசி வெற்றி பெற்றால் கோடிக்கணக்கான இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி குத்துவதற்கு தயாராக உள்ளதாக சீரம் தடுப்பூசி கம்பெனி தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்தார்.மக்கள் பணம் தர வேண்டாம், அரசே இலவசமாக தரும் என்றும் கூறினார். இந்த கடினமான காலத்தில் இதில் லாபம் பார்க்க விரும்பவில்லை, ஒரு சேவையாக செய்கிறேன் என்றும் கூறினார். ஒரு தடுப்பூசி விலை சுமார் 1000 ரூபாய்.இந்தியாவில் 130 கோடி பேர். ஒரு முறை குத்தினால் 130 கோடி× 1000 ரூவா ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் கோடி செலவாகும். ஒவ்வொருவருக்கும் ரெண்டுமுறை குத்தினால் 100 சத பாதுகாப்பாம். எனில் 2 லட்சத்துக்கு 60 ஆயிரம் கோடி செலவு.இரு முறை குத்தினாலும் கொரானாவிலிருந்து பாதுகாப்பு 6 மாதத்திலிருந்து ஒரு வருடம் என்றாலே சாதனை. அதற்கே ஒரு வருடம் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வகை ஊசிகள் வருடா வருடம் போட வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்துக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்.மக்களூக்கு இலவசம் என்கிறார். மோடி பாஜக நிதியிலிருந்தா தர போகிறார்? மக்கள் வரிப்பணம்.பாருங்கள் 95 சதம் எந்த அறிகுறியும் இல்லாமல் சரியாகும் ஒரு நோய்க்கு பெருமுதலாளித்துவம் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சி ஒரு தீர்வு சொல்கிறது.


SHARE

Related posts

Leave a Comment