கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை கொரோனா பாதிப்பு 100-க்கு அதிகமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-க்கு குறைவாக இரட்டை இலக்கில் அதாவது 50-க்கு குறைவாக இருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று முன்தினம் 58 ஆகவும், நேற்று 63 ஆகவும் உயர்ந்தது. 57 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள். நேற்று 359 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவையில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நேற்று முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.