சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை

SHARE

பெங்களூரு: உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவிற்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கூறப்படுவதாவது: பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் 27-ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்தது. இதனிடையே இன்று அவருக்கு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரு போரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் சசிகலா காய்ச்சல் இருமல், தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது ஆக்ஸிஜன் அளவு 79 சதவீதம் ஆக இருப்பதால் தொடர்ந்து அவருக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


SHARE

Related posts

Leave a Comment