அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொடர் பிரார்த்தனை செய்ய உள்ளதாக சசிகலா இன்று திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தினகரனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நான் என்றென்றும் பதவிக்காக வோ, பட்டத்திற்காகவோ,அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலிதாவின் தொண்டர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் பொது எதிரியின் ஆட்சி அமையாது தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய தொண்டர்கள் பாடு பட வேண்டும். ஜெயலிதாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி . இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
டி.டி.வி.தினகரன்சசிகலா அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை வரவழைக்கிறது.சசிகலாவை அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரை மணி நேரம் வலியுறுத்தினேன் இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார் இத்துடன் இன்றைய நாடகம் முடிவடைந்தது.