தியாக திருநாளானபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வரலாறு காணாத வகையில் சமுக இடைவெளியுடன் மெக்காவில் தொழுகை நடைபெற்றது.இந்த தொழுகைக்கு மிக குறைவானவர்களே அனுமதிக்கப்பட்டனர்.
டெல்லி ஜும்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தனிமனித இடைவெளியுடன் சிறப்புத்தொழுகை நடத்தினர். ஒருவொருக்கொருவர் பக்ரீத் பண்டிகை திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். நாடு முழுவதிலும் இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.