ஜூன்19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில், ஜூன் 26 ஆம் தேதி செங்கல்பட்டு எல்லைக்குள் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ரஜினி சென்றபோது, சீட் பெல்ட் அணியாததால் அபராதம் செலுத்தியிருப்பது சமீபத்தில் தெரியவந்தது.
இது ஒருபக்கமிருக்க, முழு ஊரடங்கின் போது ரஜினி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. முழு ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், ரஜினியின் வாகனம் பறிமுதல் செய்யப்படாமல் அவருக்கு அபராதம் மட்டும் விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கி தான் கேளம்பாக்கம் சென்றுள்ளார் எனவும்,செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ரஜினி இ-பாஸ் வாங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.