சவால் விட்டு கொரோனாவில் இருந்து மீண்டார் பிரேசில் அதிபர்

SHARE

“எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் நான் வருந்துவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. எனக்கு எந்த கவலையும் இருக்காது. இது மற்றொரு வகையான காய்ச்சல்தான்” என கூறியவர் பிரேசில் அதிபர்.

பிரேசில் நாட்டின் பெருநகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி பணிக்கு செல்ல வேண்டும் என ஜெய்ர் போச்னாரோ  தெரிவித்த கருத்து அந்நாட்டில் சர்சையை ஏற்படுத்தியது.

 பின்னர் அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்த போது பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் ராமாயணத்தை மேற்கோள் காட்டிய அவர் “அனுமன் சிரஞ்சீவி மலையையே கொண்டு வந்து இலட்சுமனனை காப்பாற்றியது போல ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை இந்தியா காக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில்,பிரேசில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்திற்கு வந்தது.அதே நேரம் அதிபர் ஜெய்ர் போச்னாரோவை கொரேனா பாதித்தது.

இதையடுத்து, அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டாடர்ர். ஒரு வாரத்திற்கு மேலாக தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு கடந்த 15 ஆம் தேதி போல்சோனரோ 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு விரைவில் மீண்டும் பரிசோதனை செய்வேன் என போல்சனேரோ கூறியிருந்தார்.

அதிபர் போல்சனேரோவுக்கு 21-ம் தேதி 3-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைகளை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் 4வது சோதனையில் கொரோனாவில் குணமடைந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment