சாதாரண மக்களுக்கு என்ன செய்தார் மோடி – ராகுல்காந்தி கேள்வி

SHARE

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று முதல் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வணக்கம் தமிழகம் என்ற பெயரில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ராகுல்காந்தி பிரசாரம்செய்து வருகிறார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று ராகுல்காந்தி ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருப்பூரில் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல்காந்தி பேசியதாவது:-

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், தமிழக மக்களின் நலனை பாதுகாக்கும் மற்றும் நரேந்திரமோடியால் மிரட்டமுடியாத அரசினை நீங்கள் தேர்ந்தெடுக்க நான் உங்களுக்கு உதவ வந்துள்ளேன்.

அன்பு மற்றும் மரியாதை என்ற மொழியை மட்டுமே தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள். இந்த மொழி பாஜக-வுக்கு புரியாது.

நாம் இன்று பேசிக்கொண்டிருக்குபோது சீன படையினர் நமது எல்லையை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர். பிரதமர் சீனா என்ற வார்த்தையை கூட கூற மறுக்கிறார். இதுதான் நமது நாட்டின் உண்மையான நிலை.

தனக்கு நெருக்கமானவர்களின் 10 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்தார், சாதாரண மக்களுக்கு அவர் செய்தது என்ன? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.


SHARE

Related posts

Leave a Comment