ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரின் ரத்த அழுத்தம் சற்று சீரானது.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், இன்று மாலைடிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஒருவாரம் ஓய்வெடுக்கவேண்டும் எனவும், ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும், மன அழுத்தமின்றி இலகுவான பணிகளை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் எனவும்,அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.