ஜம்மு விமான படைத்தளத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இந்த விமான படை தளம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசராணை மேற்கொண்டதில் இங்குள்ள கட்டிடம் ஒன்றின் கூறை பகுதி சேதமைடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக வீசப்பட்ட குண்டு அங்கிருந்த காலி அடத்தில் வெடித்துள்ளது இதனால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீரில் இருந்து ஜம்முபிரிக்கப்பட்ட பின் நடைபெறம் முதல் தீவிரவாத சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது