ஜல்லிக்கட்டு போட்டி – 18 காளைகளை அடக்கி சாதனை,கருப்பாயூரணி கார்த்திக்கு கார் பரிசு

SHARE

 மாட்டுப் பொங்கல் தினமான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

காளைகளின் வயது, எடை, உடல்நிலை உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் 651 மாடுபிடி வீரர்கள் இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்க முற்பட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு சுமார் 25 வீரர்கள் என்ற வகையில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். 
பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை பிடித்த கார்த்தி என்ற வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது.

18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசை வென்றார். 17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திக்கு மூன்றாவது இடம்
பாலமேட்டை சேர்ந்த யாதவா உறவின் முறையைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசு கிடைத்தது. வெற்றி பெற்ற காளைக்கு காங்கேயம் பசு மாடு, கன்றுடன் வழங்கப்படுகிறது 686 காளைகளும், 600 வீரர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர்.    


SHARE

Related posts

Leave a Comment