டிசம்பர் 4ல் குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்.

SHARE

வங்க கடலில் உருவான நிவர் புயலை தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், திரிகோணமலையில் இருந்து 500 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 

பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் கரையை கடந்து மன்னார் வளைகுடாவிற்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் டிசம்பர் 4 ஆம் தேதி குமரி – பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே புயல் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுருப்பதால், பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment