டிரம்ப் நம் நாட்டுக்கு மோசமான ஜனாதிபதி என முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மைக்கேல் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், வெள்ளை மாளிகையில் இருந்து நமக்கு கிடைப்பது குழப்பம் மட்டுமே என தெரிவித்த அவர், ஜோ பிடனை தமக்கு தெரியும் என்றும் கண்ணியமான அவர் உண்மையைப் பேசுவார், அறிவியலை நம்புவார் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்கும் ,
தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும், நம் நாட்டை வழிநடத்துவதற்கும் என்ன தேவை என்பதை ஜோ பிடன் அறிவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் உருவாக்கிய குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர நவம்பர் மாதம் ஜோ பிடனை தேர்ந்தெடுக்க அமெரிக்கர்களை அவர் கேட்டுக்கொண்டார்.