ஜூன் 28ம் தேதி, ஒரு நாள் லாரி உரிமையாளர்கள் ‘வேலை நிறுத்தம் நடத்த, உள்ளதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அதன் தலைவர் குல்தரங் சிங் அத்வால் அறிக்கை:டீசல் விலை உயர்வால், போக்குவரத்து துறை சார்ந்தோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்படுகின்றனர். அதை மீட்க மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் வைத்து, நாடு முழுதும் ஒரே விலையையும், விலை மாற்றத்தை, ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் நிர்ணயிக்க வேண்டும்.
வாகன கடன் தவணைக்கு, ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டும். ‘இ – வே பில்’ மீதான குளறுபடிகள், போலீஸ், ஆர்.டி.ஓ., மற்றும் ஜி.எஸ்.டி., அலுவலர்களின் ஊழலை தடுக்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை, பிரதமர், மத்திய – மாநில போக்குவரத்து துறை அமைச்சர்களிடம், 28ல் வழங்க உள்ளோம். அன்று, வாகன தொழிலின் கறுப்பு நாளாக அனுசரித்து, ஒரு நாள் லாரிகளை நிறுத்த உள்ளோம். கோரிக்கைகளுக்கு ஜூலை, 28க்குள் தீர்வு கிடைக்காவிட்டால், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.