டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

SHARE

எமது டெல்லி செய்தியாளர்-

டெல்லியில் சராசரியாக நான்கில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி முழுவதிலும் இருந்து பெறப்பட்ட சுமார் 21 ஆயிரம் மாதிரிகளை ஆய்வு செய்ததில், 22.86 சதவீதம் பேரின் ரத்தத்தில் தொற்று இருந்ததாகவும், அதேசமயம் மொத்த மாதிரிகளில் சுமார் 23 சதவிதம் பேரின் ரத்தத்தில், கொரோனா வைரசுக்கான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா வைரசின் அதீ தீவிரத்தன்மை குறைந்து இருக்கும் நிலையிலும், கொரோனா முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிவதும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும் அவசியம் என ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.


SHARE

Related posts

Leave a Comment