UMAPATHY KRISHNAN – NAL
779 கோடி மக்கள் தொகை – இது உலக மக்கள் தொகையின் இன்றைய நிலை.
இதில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 80 லட்சம் . ஆனால் உயிரிழந்தவர்கள் எண்ணிகை வெறும் 5 லட்சத்து 90 ஆயிரம் தான்.
இது உலக மக்கள்தொகையான 779 கோடியில் எத்தனை சதவிகிதம் என்பதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம் .. இந்த நிலையில் தான் இந்த உலகம் முற்றிலும் முடக்கப்பட்டிருக்கிறது.
இதில் உலகில் கிட்டதட்ட கால் பகுதி மக்கள் தொகை கொண்ட சீனா முற்றிலும் மீண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதற்கு என்ன காரணம் என்பது சீனாவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இந்தியாவை பொறுத்தவரை என்ன வகையான மருத்துவம் மக்களை இன்று வரை காத்து வருகிறது என்பது அனைவருக்கும் வெளிச்சம்.
தடுப்பு மருந்து ஏன் -?
வந்து விட்ட நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காமல் தடுப்பு மருந்தில் ஆர்வம் செலுத்துவது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1கோடியே 39 லட்சம் . நோய்க்கு மருந்து என்றால் இவர்களுக்கு மட்டும் தான் செலுத்தியிருக்க முடியும்.இதில் லாபம் இருந்தாலும் ஆயிரக்கணக்கான கோடிகள் தான் கிடைக்கும். ஆனால் தடுப்பு மருந்து என்றால்! உலக மக்கள் தொகையில் பாதி பேருக்கு போட்டுவிடலாம். ஒரு கோடியே 39 லட்சம் எங்கே.300 கோடி பேருக்கு மருந்து விற்பது எங்கே. இது ஒரு தரப்பினரின் வாதம். ஆனால்,உலக மக்களை காப்பாற்ற தடுப்பு மருந்து ஒன்றே வழி என்கிறது WHO இது அமெரிக்காவில்
அமெரிக்காவில் கோடை கால முடிவில், அதாவது அடுத்து மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விடலாம்.
இதை டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சிஎன்பிசி தொலைகாட்சி செய்தி வெளியிட்டது .
அமெரிக்க சுகாதார அதிகாரிகளும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கோடை காலத்தின் இறுதியில் அதாவது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி விட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளன.
. தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிவு அடைவதற்கு முன்பாகவே அதன் உற்பத்தி தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியது. இன்னும் 4 முதல் 6 வார காலத்தில் இந்த தடுப்பூசி உற்பத்தி பணி தீவிரமாக நடக்கும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்..
அமெரிக்காவில் வரும் ஜனவரி மாதத்துக்குள் 30 கோடி தடுப்பூசி ‘டோஸ்’களை உருவாக்கும் வகையில் ‘ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை கூட்டாக இணைந்து கடந்த மே மாதம் தொடங்கியது நினைவுகூறத்தக்கது.
இன்றைய தேதியில் இது ரஷ்யாவில் உள்ள நிலை
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பிரிட்டன்,இந்தியா அமெரிக்கா,உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆனால் ரஷ்யா கடந்த மாதமே மனிதர்களிடம் தனது சோதனையை துவங்கிவிட்ட நிலையில் தற்போது சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் ரஷ்ய தடுப்பு மருந்து தான் உலகின் முதல் தடுப்பு மருந்தாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிகார பூர்வ செய்தி நிறுவனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது.
இந்திய தடுப்பூசி நிலவரம்
இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது கண்டுபிடிப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி கடந்த 15 நாட்களுக்கு முன்பு சோதனையை துவங்கியது.
இந்திய மருந்தும் வரும் ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதனிடையே தடுப்பு மருந்த சர்சையில் சிக்கியுள்ள பில் கேட்ஸ் சற்று முன்னர் ஒரு தகவலை வெயியிட்டுள்ளார்.
“பில்” கேட்ஸ்
உலகிற்கே கோவிட் 19 மருந்தை தயாரித்து அனுப்பும் சக்தி இந்தியாவிற்கு உள்ளது என சற்று நேரத்திற்கு முன்னர் பில் கேட்ஸ்தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே மிக சக்தி வாய்ந்த மருந்து நிறுவனங்கள் உள்ளதை சுட்டிகாட்டியுள்ள பில் கேட்ஸ், இந்தியா மருந்து கண்டுபிடித்துவிடும் என குறிப்பிடாமல் ,தயாரித்து வழங்கும் சக்தி வாய்ந்தது என மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்.
மென்பொருள் நிறுவனம் நடத்தி உலக நம்பர் ஒன் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா மட்டுமல்லாது புதிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு ( இந்தியா,இங்கிலாந்து,ஸ்பெய்ன் இத்தாலி) மிகபெரும் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
குறிப்பாக இந்தியாவில் மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு கூட ஆய்வுக்கென ஏற்கனவே 100 கோடி ரூபாய் வரை நன்கொடையாக கொடுத்துள்ளார்.
எனவே யார் மருந்து முதலில் தயாரித்தாலும், அதனை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் உரிமம் பில்கேட்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதால்,இந்த தடுப்பு மருந்து மூலம் பல லட்சம் கோடியை அள்ள போவது யார்,எந்த நாடு, என்ற கேள்வி சர்வதேச மருந்து சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.