தடுப்பூசி கட்டாயம்- உத்தரவை வாபஸ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்

SHARE

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்கள் அனைவரும் சான்றிதழுடன் வர வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் நேற்று உத்தரவு வெளியானது. https://423d2204a7bc4ac2ada1f40c6cfdc658.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
இந்த நிலையில், மேற்கண்ட உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதி என்ற உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கம் போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment