எமது பினாங்கு சிறப்பு செய்தியாளர்
மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில், கடலுக்கடி சுரங்கப்பாதை திட்டம் செயல்பாட்டிற்கு 33 லட்சம் மலேசிய பணமான வெள்ளி அளவிற்கு லஞ்சம் கேட்டதாக, 2011ல் பினாங்கு முதல்வராக இருந்த லிம் குவான் எங் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று பினாங்கு மாநிலம் பட்டர் வொர்த்தில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தான் குற்றவாளி இல்லை என மறுத்ததுடன் இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறும், அதற்கு தாம் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
டிஏபி பொதுச்செயலாளராக இருக்கும் லிம் குவாங் எங் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
பினாங்க துணை முதலமைச்சர் ராமசாமி உள்ளிட்ட பிரமுகர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.