தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு

SHARE

தமிழகத்தில் ஆகஸ்ட்.,29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,” என, சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 30ம் தேதி வரை கனமழை தொடரும் என தெரிவித்துள்ளார்..

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


தமிழகத்தில் 29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வரும் 29 ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசியிலும்
ஆகஸ்ட் 30ல் நீலகிரி, கோவை, திருப்பூரிலும் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.29 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்
ஆகஸ்ட் 30 வரை கேரள கடற்கரை பகுதிகள், லட்சத்தீவு, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்து உள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment