தமிழகத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடி கொரோனா தொற்றால் இறப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

SHARE

கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக வேகத்தில் பணியாற்றி வருகிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 36 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர் பாதிக்கப்பட்டவர்களில் , 2.72 லட்சம் பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார் .
இறப்பு எண்ணிக்கை குறித்த பீதி தேவையில்லை என்றும் இப்போது வெளியிடப்படும் இறந்தவர்களின் பட்டியலில் 10 சதவீதம் பேர் மட்டுமே நேரடி கொரோனா தொற்றால் இறந்தவர்கள். மற்றவர்கள் இணை நோய்களையும் கொண்டவர்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி இவர்களையும் கொரோனா இறப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அதேநேரத்தில் லேசான அறிகுறிகள் தென்படும்போதே அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.


SHARE

Related posts

Leave a Comment