தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை

SHARE

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக , பெருங்களூர், வல்லத்தில் தலா 13 செ.மீ., கீழ் பென்னாத்தூரில் 11 செ.மீ., தஞ்சாவூரில் 9 செ.மீ., காரியாபட்டி, அரிமனம், சமயபுரம், லால்குடியில் தலா 8 செ.மீ., வானூர், இலுப்பூரில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment