தமிழகத்தை கடிக்கும் எடி…

SHARE

உமாபதிகிருஷ்ணன்

கொரோனா பரவல் ஆரம்ப காலத்தில் பல மாநிலங்களில் குறைவாகவே காணப்பட்டது.மேலும் ஊரடங்கு கொரோனா பரவலை தடுத்தது என்பது உண்மை தான் .ஆனால்,தளர்வுகளை அறிவித்த மாநிலங்களில் மீணடும் தொற்று அதிகரிக்கவே செய்தன.எவ்வளவு காலங்கள் அடைத்து வைத்தாலும், மீண்டும் திறந்துவிட்டால் தொற்று அதிகரிப்பது வழமையாக நடைபெறுகிறது.

அந்த வகையில் முதலில் தொற்று மிக குறைவாக காணப்பட்ட கர்நாடக மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கிடுகிடு என உயர்ந்தன.

இந்த நிலையில் மீண்டும் தமிழகம எவ்வாறு தளர்வு திட்டங்களை அறிவித்துள்ளதோ அதே திட்டத்தை தாமும் அறிவித்துள்ளார் எடியூரப்பா.

இன்றிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பொது முடக்கத்தால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாது. இதனால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவையே வைரஸ் பரவலைத் தடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார் அவர். பொது முடக்கம் நீக்கப்பட்டாலும் அனைத்துத் துறைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுவிடவில்லை .

பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் jமிழக பாணியில் ,இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை பொது முடக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் முழு பொது முடக்கம், ஜூலை 31ஆம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பெரிய காய்கறி சந்தைகள் மூடப்பட்டு திறந்தவெளி மைதானங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் தமிழகம் அறிவித்துள்ள முறைகள். இவை அனைத்தையும் காப்பியடித்து விட்டு தமிழகம் மற்றும் மகாராஸ்ட்டிரா மாநிலத்தில் இருந்து வந்தவர்களால் தான் கொரோனா பரவிவிட்டதாக கடிந்து கொண்டுள்ளார் எடியூரப்பா.


SHARE

Related posts

Leave a Comment