தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.பதிவு: மார்ச் 26, 2021 19:50 PMசென்னை,
தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் இன்று உயர்ந்துள்ளது. இதுபற்றி தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,971 பேருக்கு (நேற்று 1,779 பேர்) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.75 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,195 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 286 ஆக உயர்வடைந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,650 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.