மெட்ராஸ் ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார்.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இன்று திங்கட்கிழமை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், ஆர்.சுப்பையா, எம்.சத்யநாராயணன் தமிழக அமைச்சர்கள், தலைமை செயலாளர் க.சண்முகம், பிற துறை செயலாளர்கள், டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
