bfh
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் உள்ள மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், கடந்த மாதம் 8-ந் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜூன் 10-ந் தேதியில் இருந்து பொது தரிசனத்தில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயங்காருக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தரிசனத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தேவஸ்தான தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலரின் எச்சரிகைகளையும் மீறி தேவஸ்தானம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலை வழிபாட்டிற்கு திறந்து விட்டது ஏன் என கேள்வி எழுந்தபோது எதை பற்றியும் கவலை படாத கோயில் நிர்வாக தற்போது இந்த பரிந்துரையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.