தொண்டர்களை சந்திக்க வருகிறேன்; சசிகலா புதிய ஆடியோவால் பரபரப்பு

SHARE

கொரோனா தாக்கம் முடிந்தவுடன் தொண்டர்களை சந்திக்க வருவதாக சசிகலா பேசும் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவுக்கு, அ.ம.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்தால், அ.தி.மு.க., நிர்வாகிகள் அவர் பக்கம் செல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் மறைமுக நெருக்கடி காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக, சசிகலா திடீரென அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. தினகரனின் அ.ம.மு.க., படுதோல்வியை சந்தித்தது. இந்தச் சூழ்நிலையில், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தொண்டர்களிடம் அவர் தொலைபேசியில் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது

இந்நிலையில், அரக்கோணம் செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா பேசும் 5-வது ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறாங்க.. புரியுது.. இந்த கொரோனா தாக்கம் முடிந்த உடன் தொண்டர்களை எல்லாம் சந்திக்க வருகிறேன். எதுக்கும் பயப்படாதீங்க. என்று ஆறுதல் சொல்லும் வகையில் ஆடியோ வெளியாகியுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment