மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ், சிகிச்சைக்கு பின்னர், நலமுடன் வீடு திரும்பினார்.
இந்திய அணிக்கு 1983 ல் முதல் உலக கோப்பை பெற்று தந்தவர் முன்னாள் கேப்டன் கபில்தேவ்(62).
கடந்த 22ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டில்லியில் உள்ள ‛போர்டிஸ் எஸ்கார்ட்ஸ்’ இருதயமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரி செய்ய ‛ஆன்ஜியோபிளாஸ்டி’ சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிரிவில் நலமாக இருந்தார். இதனையடுத்து அவர் இன்று டிஸ்சாரஜ் செய்யப்பட்டார்.