நாளை மறுதினம் பயண்பாட்டிற்கு வருகிறது உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து.

SHARE

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்ற உலகத்தின் எதிர்பார்ப்பு நாளை மறுதினம் நிறைவேறவுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து பல்வேறு இன குழுக்களிடம் சோதனை நடத்தப்பட்டு வெற்றியடைந்துள்ளது.கிட்டத்தட்ட 15 ஆயிரம் மனிதர்களுக்கு குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சோதனை செய்யப்பட்டு மூன்றாம் கட்டத்தை கடந்து வெற்றியடைந்துள்ளது

இந்த நிலையில், ரஷிய நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன.

தடுப்பூசியை யார் முதலில் விற்பனை செய்வது என அமெரிக்கா,ரஷ்யா இடையே பெரும் போட்டி நிலவும்நிலையில் ரஷ்யா வெற்றி வாகை சூட நாளை மறுதினம் வருகிறது.

இதனை தொடர்ந்து சீன மருந்து அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. ரஷ்யாவை பொறுத்தவரை தனது நாட்டு மக்களுக்கு முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சீனா வெளிநாடுகளில் விற்பனை செய்து லாபம் ஈட்டும் முடிவை கையில் எடுத்துள்ளது.


SHARE

Related posts

Leave a Comment