நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்

SHARE

நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்து சேவை துவக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்ப்பட்டது. கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பபட்ட போதிலும் ஆம்னி பேருந்து இயக்குவது தொடர்பாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.


இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் அன்பழகன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது: மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் ஆம்னி பஸ்களின் சேவை துவக்கப்படும்., பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளி்ன வழிகாட்டுதல்படி பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment